போராட்டங்களைத் தடுக்கும் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

இன்றும், நாளையும் நாடாளுமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதைத் தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை கடுவெல நீதிவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தலங்கம பொலிஸ், மீரிஹானவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், சட்டமா அதிபர் திணைக்களம் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பெற முயற்சித்தனர் என்று சட்டத்தரணி கமல் விஜேசேகர தெரிவித்தார்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புக்கு முரணானது என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான சிறப்புரிமை மீறப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர் என்றும் இது தவறான வியாக்கியானம் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். விசாரணைகளை அடுத்து கடுவெல நீதிவான் நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

Spread the love