எரிவாயுவின் விலை போன வாரத்தைவிட இவ்வாரம் விலை அதிகரித்தது – மக்கள் அவதி

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை (லாஃப் காஸ்) நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் குறைந்த பாடில்லை என நுகர்வோர் விசனம் தெரிவித்தனர் அத்துடன் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவியே வருகின்றது என மக்கள் குற்றம் சாட்டினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்றும் நீண்ட வரிசைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிகாலை முதல் வரிசைகளில் நின்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது .

எனினும், இறுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடனேயே மக்கள் வீடு திரும்புவதைக்காணக்கூடியதாகவே இருந்தது. இலங்கை ரூபாவிற்கு நிகரான டாலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையிலேயே, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Spread the love