பொருளாதார வீழ்ச்சி உட்பட உணவு மற்றும் சக்தி வலு பிரச்சனைகளுக்கு ரஷ்யா காரணம் இல்லை-புடின்

ரஷ்ய உக்ரைன் போர் சூழல் காரணமாக, உலகில் தற்போது உணவு மற்றும் எரி சக்தி வலு போன்றவற்றிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடும், அதேவேளை பொருளாதார குழப்பங்களும் காணப்படுகின்றன.


ரஷ்ய அதிபர் புடின், அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றில் கேட்கப்பட்ட, “தற்போதைய உலக பொருளாதார சிக்கல், பண வீக்கம், சக்தி வலு பிரச்சனை, உணவு தட்டுப்பாடு போன்றவற்றிற்கு ரஷ்யாவே காரணம் என்றும், உக்ரைன் மீது தேவையில்லாத படையெடுப்பு ஒன்றினை மேற்கொண்டதன் விளைவுதான் இது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை சுட்டி வரும் நிலையில் ரஷ்யா அதிபராகிய உங்களின் பதில் என்ன?,” என அதிபர் புடினிடம் வினவப்பட்ட கேள்விக்கு புடின் பதிலளிக்கும் போது,”தற்போது உலகில் காணப்படுகின்ற பொருளாதார வீழ்ச்சி உட்பட உணவு மற்றும் சக்தி வலு பிரச்சனைகளுக்கு ரஷ்யா காரணம் இல்லை.


நாம் எந்த தடைகளையும், எந்த நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளவில்லை. மாறாக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளே அனைத்து தடைகளையும் விதிக்கின்றது. மேற்படி தடைகளின் காரணமாகவே எமது உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதிகள் முற்றும் தடைசெய்யப்படுகின்றன.


அண்மையில் கூட, உணவுக் கப்பல் ஒன்றை சர்வதேச கடற்பரப்பில் நுழைவதற்கு நாம் அனுமதியளித்திருந்தோம். ஆனால் மேற்கு நாடுகள், அதிலும் ஒரு அரசியல் விளையாட்டை ஆடியிருந்தார்கள். எமது வேண்டு கோள்களுக்கு மேற்கு நாடுகள் செவிமடுப்பதில்லை . ஆகவே நாம் இப்போதும் எமது உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதிகளை தொடர ஆயத்தமாக உள்ளோம். நடைபெற்றுக் கொண்டிருக்கும் போருக்கும், ஏனைய நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் தாமாகவே இந்த போர் விடயத்தில் மூக்கை நுழைக்கின்றார்கள். அதற்கு ரஷ்யா பொறுப்பாகாது”. என அதிபர் புடின் தனது பதில் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

Spread the love