புதிய இறக்குமதி கொள்கையை வெளியிட்ட அரசு

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில், புதிய இறக்குமதி கொள்கை திருத்தங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இறக்குமதி பொருட்கள் மீதான தற்காலிகத் தடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டது.

ஏற்கனவே ஜூலை 9 முதல், மலசலக்கூட துடைப்பி (டொய்லட் பேப்பர்), கட்டுமான பொருட்கள், இயந்திர பாகங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் உள்ளிட்ட 159 பொருட்களுக்கான தடை நீக்கப்பட்டது. இதேவேளை ஆகஸ்ட் 23 முதல் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

Spread the love