பிரித்தானியாவில் Omicron plan C கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய திட்டம்

பிரித்தானியாவில் Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பிளான் B கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது போதாதென, பிளான் C என்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பிரித்தானிய அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், புதன்கிழமை பிளான் B கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி, மாஸ்குகள் அணிவது கட்டாயம், வீடுகளிலிருந்து வேலை பார்க்க உத்தரவு முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், பிளான் B திட்டங்களால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன.

அந்த கட்டுப்பாடுகளே, அதாவது பிளான் B கட்டுப்பாடுகளாலேயே ஆண்டின் வருவாய் வரும் காலகட்டமான கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்கள் கொந்தளித்துப் போயிருக்கும் நிலையில், Omicron வைரஸால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் அச்சுறுத்தல் இருப்பதாக நிரூபணமாகும் நிலையில், கூடுதலாக, பிளான் C திட்டத்தின் கீழ் புத்தாண்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வகையில், பிளான் C திட்டத்தின் கீழ் முதலில் இருப்பது, விருந்தோம்பல் துறையின் கீழ் இருக்கும் இடங்களுக்குச் செல்வோர், கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தால், NHS அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக, தங்கள் முகவரி முதலான தகவல்களை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற விதியை மீண்டும் அறிமுகம் செய்தலாகும். அதாவது, உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலான இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் முதலான மேலும் பல கட்டுப்பாடுகள் புத்தாண்டில் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love