பிரிட்டன் பவுண்ஸின் மதிப்பு 1971இற்கு பின் பெரியளவில் வீழ்ச்சி

பிரிட்டன் நாணயமான பவுண்ஸின் மதிப்பு 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ஸின் மதிப்பு நேற்று முன்தினம் காலை சுமார் 4 வீதம் சரிவு கண்டிருந்தது. இதன் பின்னர் அதன் மதிப்பில் சற்று ஏற்றம் ஏற்பட்டிருந்தது.

தற்போது ஒரு பவுண்ஸின் மதிப்பு ஓர் அமெரிக்க டொலர் 5 ஆக காணப்பட்டது. பிரிட்டனின் புதிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் சர்ச்சைக்குரிய சில பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது வரலாறு காணாத வரிச்சலுகைகள், பெரிய அளவில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அது பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

Spread the love