பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்படும்

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அனுசரணையாளர்களைப் பெற்று வருவதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love