பாகிஸ்தான் தூதரகத்தில் பிரியந்தவுக்கு அஞ்சலி

பாகிஸ்தான் – சியால்கோட்டில் வன்முறை கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பிரியந்த குமாரவின் நினைவாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சியால்கோட் வர்த்தக சபை மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர், எனது கணவருக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இது பழிவாங்குவதற்காக அல்ல. ஆனால் எதிர்காலத்தில் யாருக்கும் இந்நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே’ எனத் தெரிவித்தார்.

அத்துடன் இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக உயர் ஸ்தானிகராலயத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதரவளித்த இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் அவர் நன்றிகளை கூறினார்.

Spread the love