பனிக்கட்டிகளுக்கு கீழ் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீந்தி புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

அம்பெர் ஃபிலாரி என்ற பெண் நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். பனிக்கட்டிகளுக்கு கீழ் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நோர்வேயில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். பனிக்கட்டிகளுக்கு அடியில் அவர் நீச்சல் அடிக்கும் போது துடுப்புகளையோ அல்லது டைவிங் சூட்டையோ பயன்படுத்தவில்லை என்பதுதான் இப்போதைய சாதனையின் கூடுதல் சிறப்பு. இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

மேலும், நீச்சலில் சாதனை பெற்ற பெண் இது குறித்து தெரிவித்த போது, சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத்தொடங்கினேன். இப்படித்தான் தொடங்கியது என் பயணம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளேன் என்றார். இவர் ஊக்கப்படுத்தும் பேச்சாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love