பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவில் சுனாமி!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த தீவுகளை சுனாமி தாக்கியது, ‘ சுமார் ஒரு இலட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகள் நிலப்பரப்பின் மீதும் கடலுக்கு அடியிலும் அமைந்துள்ளன.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை வெடித்ததை அடுத்து, கடலில் சுனாமி அலை உருவானது. மேலும், சுனாமி அலைகள் அத்தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. மீண்டும் எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love