நேட்டோ நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பவர்கள் ரஷ்யாவுடன் மோதுபவர்களாக கருதப்படுவர் என்று ஜனாதிபதி புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய விமானப்படையின் பெண்கள் பிரிவினர் இடையே நேற்று பேசிய புடின், உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்கதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் 3 ஆம் தரப்பினர் (நேட்டோ) இந்த ஆயுத சண்டையில் பங்கேற்கேற்பவர்களாக ரஷ்யாவால் கருதப்படுவர். நமது பாதுகாப்பு படையினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எவரேனும் அந்த நடவடிக்கையை (வான் பரப்பு தடை) மேற்கொள்ளும் பட்சத்தில், அவர்கள் எந்த அமைப்பில் (நேட்டோ) உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த நொடியே அவர்கள் (நேட்டோ) இந்த இராணுவ சண்டையில் பங்கேற்பவர்களாக ரஷ்யாவால் கருதப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த பேச்சு உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறும் பகிரங்க எச்சரிக்கையாக கருதப்படுகிறது. 

Spread the love