நீண்ட காலம் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்த நாய்

அமெரிக்காவிலுள்ள நாயொன்று, அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துவரும் நாயாக கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிஹவாஹவா வகையைச் சேர்ந்த நாயொன்று 21 வருடங்கள் 66 நாட்களைக கடந்து, அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.


இந்த நாயானது உலகின் மிகப் பழமையான நாய் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நாயானது, அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்குச் சொந்தமானது. அவர் நாயை ஷோர் இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்றும் தெரிவித்தார். மேலும், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கின்னஸ் அமைப்பு பதிவிட்டதனைப் பகிர்ந்த அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிஹவாஹவா சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 வருடங்கள் வரை உயிர்வாழும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது செல்லப்பிராணி 20 வயதினைக் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை, தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றார்.

Spread the love