நியூஸிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் அமைச்சர் கிரிஸ் ஹிப்கின்ஸ் பதவிப்பிரமாணம்

நியூஸிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் அமைச்சர் கிரிஸ் ஹிப்கின்ஸ்(Chris Hipkins) பதவிப்பிரமாணம் செய்துள்ளார். தலைநகர் வெலிங்டனில் நடைபெற்ற நிகழ்விலேயே புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார்.

கடந்த 05 வருடங்களாக பிரதமர் பதவியிலிருந்த ஜசிந்தா ஆர்டனின் இராஜினாமாவை அடுத்து, 44 வயதான கிரிஸ் ஹிப்கின்ஸ் நாட்டின் 41ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

பின்வரிசை உறுப்பினராகவும் ஒரு சகோதரியாகவும் ஒரு தாயாகவும் இருப்பதற்கு தாம் தயாராகவிருப்பதாக, ஜசிந்தா ஆர்டன் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் தெரிவித்துள்ளார்.

Spread the love