நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்-எரான்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு நாட்டின் ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியை வல்லுநர்கள் பல நெருக்கடியாக அடையாளப்படுத்துகின்றனர்.

இது திவாலான பொருளாதாரங்களுக்கு தீர்வு காணாத மற்றும் பிற நாடுகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நாடுகளுடன் தொடர்புடையது என்றார். விநியோக உந்துதல் பணவீக்கம் காரணமாக உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் அதே வேளையில் வட்டி விகிதமும் அதிகரிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் மாற்றங்களை அரசாங்கம் கருத்திற்க் கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெருக்கடி காலங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதே நிர்வாகத்தின் வழியாக இருக்க வேண்டும் என்றும்,,அரசாங்கம் நாட்டை ஆள்கிறது மற்றும் பொருளாதாரத்தை தன்னிச்சையாக நிர்வகிக்கிறது எனவும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அதேவேளையில் ஜனநாயகம் நிலவுவதை உறுதி செய்வதற்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love