நல்லூரைப் போன்று தமிழகத்திலும் கோவில்களை நிர்வகிக்க வேண்டும் – பா.ஜ.க. தலைவர் தமிழகத்தில் தெரிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவிலை புகழ்ந்து இலங்கை கோவில்களை போன்று தமிழக கோவில்களை நடத்துமாறு பா.ஐ.க தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழில் நல்லூர் ஆலயத்தை தரிசித்த பின்னர் அரசியல்வாதிகளையும் சந்தித்திருந்தார். அதன் பின் நேற்று முன்தினம் தமிழ்நாடு சென்ற நிலையில் அங்கு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருக்கும் எந்த கோவில்களிலும் அரசுக்கு வேலை கிடையாது. அதே போல் நாம் தமிழகத்தில் செய்வோம்.

யாழ்ப்பாணத்தில் முருகன் கோவில் இருக்கிறது. நல்லூர் கந்தசுவாமி கோவில் எனும் 13 நூற்றாண்டு பழைமைவாய்ந்த கோவில். அந்த கோவிலை நடத்துவது ஒரு அறங்காவலர். அங்கு அர்ச்சகர்களுக்கு தட்டில் காசு போட்டால் வாங்க மட்டார்கள். அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டுமே. பணத்தை உண்டியலில் மாத்திரமே இடமுடியும். முக்கிய பிரமுகர்கள் சாதாரண மக்கள் என்றெல்லாம் அங்கு வேறுபாடு கிடையாது. அனைவருமே வரிசையில் தான் செல்ல முடியும். தமிழ் நாட்டிலும் இவ்வாறான சட்டத்தை கொண்டு வரமுடியாதா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

Spread the love