திருமதி அழகிப்போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்த இலங்கை அழகி

இவ்வாண்டு திருமதி உலக அழகிப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி  பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார் 


2021ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டி நேற்று முன்தினம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஷைலின் ஃபோர்ட் வென்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் 58 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி இலங்கை அழகியான புஷ்பிகா டி சில்வாவும் கலந்துகொண்டார்.

இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய புஷ்பிகா டி சில்வா கடைசி ஆறுவரை முன்னேறியதுடன், தனது பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த உலகத் திருமண அழகி போட்டியில் நான் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளேன். இப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு இந்த இடத்தைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கடவுளின் விருப்பத்தால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வெற்றியையும் ஊக்கத்தையும் அளித்த லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸில் உள்ள இலங்கையர்கள் உட்பட திருமதி உலக அழகிப் போட்டியின் ஏற்பாட்டுக்குழு மற்றும் திருமதி உலக அழகிப் போட்டியின் இலங்கையின் தேசிய அமைப்பாளர் சந்திமல் ஜயசிங்க மற்றும் எனது குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் உட்பட எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love