தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 480 கிலோ கடல் அட்டை மீட்பு

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாடு-மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகளை வனத்துறை  அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர்.

மண்டபம் அருகே வேதாளை கடற்கரை  பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு  இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து  சென்ற வனத்துறையினர் சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையில் சர்வதேச மதிப்பு 50 இலட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Spread the love