ஊழல் மதிப்பாய்வில் இலங்கை முன்னேற்றம்

சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (Transparency International) நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வு சுட்டி வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த மதிப்பாய்வு சுட்டியில், புள்ளி வழங்கப்படும் முறையில் 0 என்பது கூடிய ஊழல் நிலையையும் 100 என்பது ஊழலற்ற தூய்மையான நிலையையும் வெளிக்காட்டுகிறது.

இந்த மதிப்பாய்வு சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகளின் பொதுத்துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு சுட்டியின் பிரகாரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 37 புள்ளிகள், முன்னைய வருடத்தை விட ஒரு புள்ளி குறைவாக வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளமையை வெளிப்படுத்துகிறது.

தரவரிசையின் அடிப்படையில், கடந்த 2020 ஆம் ஆண்டு 94 ஆம் இடத்திலிருந்து இலங்கை, 2021 ஆம் ஆண்டு 102 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Spread the love