தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் நிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் தனியார் பஸ் சேவைகளை இன்று திங்கட்கிழமை முதல் முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியது. எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் சில பிரதேசடிப்போக்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்படுவதோடு சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எனினும் முழுமையான அளவில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சகல ரயில் சேவைகளுக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love