சுற்றுலா பயணிகள் வருகை 60 வீதத்தால் வீழ்ச்சி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை 106,000 ஆகும். எவ்வாறாயினும், ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 32,856 ஆக குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்த காலகட்டத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நாட்டின் கிழக்குப் பகுதிக்கே அதிகம் விஜயம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் மாதத்தில் கண்டி பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார். ஆனால் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களின் முன் பதிவுகளில் சுமார் 40 சதவீதமானவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love