டொலர் தொகையில் வீழ்ச்சி, துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களால் மாதாந்தம் நாட்டிற்கு அனுப்பப்படுகின்ற டொலர் தொகை, 250 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர் தொகை துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

அதற்கான பாரிய பொறுப்பு இலங்கை பணியாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

வங்கிகள் ஊடாக நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் இலங்கை பணியாளர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Spread the love