ஜெனீவாவில் இந்தியா ஆதரிக்க வேண்டும் -மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்

மாற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழான ஏனைய குற்றங்கள் குறித்த ஆதாரங்ளை சேகரித்து ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் திட்டத்தை நீடிப்பதற்கான ஆணையை இந்த தீர்மானம் கோருகின்றது.

இலங்கையின் பொருளாதார சமூக நெருக்கடியை தொடர்ந்தும் காண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் ஐ.நா. வை கோருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை தான் மனித உரிமைகளை பாதுகாப்பதாக தெரிவித்து இதனை எதிர்க்கின்றது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பற்றாக்குறைகளிற்கு தீர்வை காண்பதற்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்த இந்தியா இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அளவிடக்கூடிய முன்னேற்றம் இல்லை என தெரிவித்திருந்தது என மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதியளவு மனித உரிமை பாதுகாப்பு இல்லாதமை குறித்து பல உலக நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ள மீனாட்சி கங்குலி இலங்கையில் மாற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Spread the love