ஜப்பானில் பிரபலம் புதிய வகை மதுபானம்

ஜப்பானில் தற்போது கரப்பான்பூச்சி பியர் ( cockroach beer) பிரபலமாகி வருகின்றது.கொஞ்சு சூர் (Konchu Sour) அல்லது இன்செக்ட் சூர் (Insect Sour) என்று இந்த பீர் வகை அழைக்கப்படுகிறது.

ஜப்பானில் கரப்பான்பூச்சியில் இருந்து பியர் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கபுடோகாமா (Kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பியர் ஜப்பானில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை ஊற வைக்கின்றனர். அதன்பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பியரை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love