சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது

சென்னை விமானநிலையத்தில் நேற்று குவைத்தில் இருந்து பயணியாக வந்த நபரால் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ₹4.55 லட்சம் மதிப்பிலான தங்ம் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கடத்தல் விவகாரம் தொடர்பாக 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குவைத் நாட்டிலிருந்து நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வேலூரை சேர்ந்த சக்தி ஜெயகிருஷ்ணன் (32) என்ற பெண் பயணிமீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பெண் அதிகாரிகள் தனியறையில் வைத்து சோதனையில் ஈடுபட்டபொது , அவரது உள்ளாடைக்குள் 880 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் இந்திய மதிப்பில் ₹4.55 லட்சங்கள் ஆகும்.

அவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது , அவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்த நாகூர்கனி (45) என்பவருக்காக தங்கத்தை கடத்தி வந்ததேன் எனவும், தான் கொண்டுவந்த தங்கத்தை வாங்க வாங்க நாகூர்கனி விமான நிலையத்துக்கு வெளியே காத்திருப்பதாகவும் கூறியதன் பேரில். கடத்தல் தங்கத்தை வாங்க வந்திருந்த நாகூர்கனியையும் சென்னை விமான நிலையப்பொலிசார் கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Spread the love