உக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் – வெளியுறவுத்துறை

உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் என இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

மீட்பு பணிக்காக அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்திய விமானப் படையின் C-17 விமானம் உட்பட 16 விமானங்கள் உக்ரைன் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் எந்த ஒரு இந்தியரும் பிணைக் கைதிகளாக இருப்பது எங்களுக்குத் தெரியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் எனக் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், குறிப்பாக உக்ரைனில் உள்ள கார்கிவில் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்புகாரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளால் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனரே தவிர, அவர்கள் எவரும் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லைல் எனக் கூறினர்.

நாங்கள் கீழ்நோக்கி நகர்கிறோம் என்று சொல்ல முடியாது, கடைசி நபரை அங்கிருந்து வெளியேற்றப்படும் வரை “ஆபரேஷன் கங்கா” எனப்படும் மீட்புப்பணி நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறினர். மேலும் அங்கு(உக்ரேனில்) ஏறக்குறைய 2000-3000 மாணவர்கள் இருப்பார்கள், சிலவேளைகளில் எண்ணிக்கை மாறுபடலாம்  என தெரிவித்த அவர்கள், இந்தியாவின் சார்பில் நாங்கள் ஒரு பங்களாதேஷ் பிரஜையை வெளியேற்றியுள்ளோம். மேலும் நேபாள நாட்டவரிடமிருந்து வெளியேற்ற கோரிக்கையைப் பெற்றுள்ளோம்.

போர்நிறுத்தம் இல்லாமல் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மிக கடினமாகத் தெரிகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா குறைந்தபட்சம் உள்ளூர் போர்நிறுத்தத்தையாவது கடைப்பிடிக்கவேண்டும் என யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் பணிவுடன்  கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான்  எங்களால் எங்கள் மக்களையும் மாணவர்களையும் வெளியேற்ற முடியும்.

கிழக்கு  உக்ரைனில் குறிப்பாக கார்கிவ், மற்றும் பிசோச்சின்,ஆகிய பிரதேசங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அங்கு சில பேருந்துகளைப் எமக்காகப்  பெற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்கனவே இயக்கப்பட்டுக்கொண்டுருக்கின்ற 5 பேருந்துகளுடன் மாலையில் மேலும் பல பேரூந்துகள் இணைந்து கொள்ளவுள்ளன.. பிசோச்சினில் பிரதேசத்தில் 900-1000 இந்தியர்கள் மற்றும் சுமிப் பிரதேசத்தில் 700 பேர் சிக்கியுள்ளனர். சுமி பற்றி நாங்கள் அதிகம் கவலை கொள்கிறோம். அவர்களை மீட்டெடுக்க சிறப்பு ரயில்களை வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம், ஆனால் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனிடையே, நாங்கள் தனியாகவும் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாங்கள் வழங்கிய அறிவுரைகளின் பிரகாரம் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை உக்ரைன் எல்லையை விட்டு வெளியேற்ற முடிந்தது. இன்னும் பலர் அங்கேயே  உள்ளனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Spread the love