சூரரை போற்று ஹிந்தி ரீமேக் அறிவிப்பு 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நேரடியாக OTT-ல் வெளியான திரைப்படம் சூரரை போற்று. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

மேலும் இப்படத்தின் ரீமேக்காக உருவாகும் படத்தை சுதா கொங்கரா இயக்குவதாகவும், சூர்யா தனது 2D நிறுவனத்துடன் இணைத்து தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் சூர்யா தற்போது சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அக்க்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சூர்யா.

Spread the love