சுகாதார அதிகாரிகளை சாடிய வடகொரியா ஜனாதிபதி

வட கொரியாவில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் அந்த நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் சுகாதார அதிகாரிகளை சாடியுள்ளார். அத்துடன் மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு அவர் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


வடகொரியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 50 மரணங்கள் பதிவாகியுள்ளன. எனினும் நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது என்பது இதுவரையில் உறுதியாகவில்லை. வடகொரியாவில் தொற்றுறுதியானவர்களை அடையாளம் காண்பதற்காக பரிசோதனை வசதி குறைவாகவே காணப்படுகிறது. அங்கு தடுப்பூசிகள் இன்மையாலும் மோசமான சுகாதார முறையாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசர குழு கூட்டத்தில் உள்நாட்டு மருந்து இருப்புக்களை விநியோகிப்பதில் அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் குழுப்பம் விளைவித்ததாக கிம் ஜோங் உன் சாடியுள்ளார்.

Spread the love