சீனாவினால் தாய்வானை சூழும் போர் மேகம்

தங்கள் நாட்டின் மீது படையெடுக்க, எல்லையில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருவதாக தாய்வான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இராணுவ அமைச்சர் சியு குவோ-செங் (Xiu Guo Cheng) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் “சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் பயிற்சிகளை நடத்துவதாகக் கூறி சீனா படைகளை நிலைநிறுத்தலாம். மேலும் தாய்வானை சுற்றி வளைக்கும் நோக்கில் மேற்கு பசிபிக் பகுதிக்கும் சீனா போர்க்கப்பல்களை அனுப்ப வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா-தாய்வான் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாதபோதிலும், தாய்வான் தன்னை தன்னாட்சி பெற்ற தனிநாடு என்கிறது, ஆனால் சீனாவோ தாய்வானில் அமைந்திருக்கும் அரசு, சட்டவிரோதமானது, தைவான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப்பகுதி என்கிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக சீனா-தாய்வான் இடையிலான ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love