சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில் உள்ள சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தலைநகரில் உள்ள நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மக்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி மேடான பகுதிகளுக்கு ஓடினர். எனினும், அமெரிக்க புவியல் ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் அளவை ஆரம்ப 7.3ஆக பதிவு செய்தது.

இந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 162பேர் உயிரிழந்துள்ளதோடு, 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love