சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) வெளியேற ரஷ்யா தீர்மானம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து(ISS) வெளியேற ரஷ்யா தீர்மானித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறவுள்ளதாகவும் தமக்கு சொந்தமான விண்வௌி மையத்தை நிறுவவுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து 1998ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வௌி நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தன.

எனினும், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ரஷ்யாவின் தீர்மானம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என நாசா கூறியுள்ளது.

Spread the love