சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ஓட்டங்கள்-ராகுல் டிராவிட்டை முந்தினார் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ஓட்டங்கள் அடித்தவர்களில் விராட் கோலி 2 ஆவது இடம் பெற்றார். இதன்மூலம் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த அவுஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 63 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுகல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல் பின்வருமாறு: சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள் – 34,357 ஓட் டங்கள் விராட் கோலி – 471 போட்டிகள் – 24,078 ஓட் டங்கள் ராகுல் திராவிட் – 404 போட்டிகள் – 24,064 ஒட்டங்கள் கங்குலி – 421 போட்டிகள் – 18,433 ஓட்டங்கள் எம்.எஸ்.தோனி – 535 போட்டிகள் – 17,092 ஓட்டங்கள்.

Spread the love