ஒரு ஆண்டில் அதிக வெற்றிபாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்திய அணி

ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. பாகிஸ்தான் அணி 2021 ஆம் ஆண்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. ஐதராபாத்தில் நேற்று அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சாதனை படைத்தது.

இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 21 ஆவது வெற்றி இதுவாகும். இதனால் ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை இந்தியா முறியடித்தது. இந்தியா இந்த ஆண்டில் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 29 ஆட்டத்தில் விளையாடி 21இல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Spread the love