சர்வதேச எஸ்.ஓ.எஸ். தினம் இன்று

சர்வதேச எஸ்.ஓ.எஸ். தினம் இன்றாகும். ஆதரவற்ற சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் சந்தோசமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது சுய உழைப்பால் பல நாடுகளில் எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமங்களை உருவாக்கியவர் பேராசிரியர் கலாநிதி ஹேர் மன் மைனர் ஆவார்.

பேராசிரியர் கலாநிதி ஹேர் மன் மைனரின் பிறந்த தினமாகிய ஜூன் 23 சர்வதேச எஸ். ஓ.எஸ். தினமாக (international sos day ) கொண்டாடப்படுகின்றது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஹேர்மன்மைனர் மனதில் இச் சிறுவர்களும் தன்னைப் போல இன்னல்படக்கூடாது என்பதற்காக தனது சொந்த முயற்சியில் இச்சிறுவர்களை பராமரிக்க முடிவு செய்தார். 1949 ஆம் ஆண்டு ஒஸ்ரியாவின் இம்ஸ்ட் எனும் இடத்தில் தனது முதலாவது எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தை நிறுவினார். பல ஐரோப்பிய நாடுகளில் எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமங்களை உருவாக்கி அதன் ஊடாக சிறுவர்களைப் பராமரித்தார். 1960 ஆம் ஆண்டு எஸ்.ஓ.எஸ். சிறுவர் அமைப்பை உருவாக்கினார்.

Spread the love