கோப் குழு தலைவர் விடுத்த விசேட அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) நாளை (12) முற்பகல் 10.00 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக குழுவைக் கூட்டாதிருக்க தீர்மானித்திருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் கடந்த கோப் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விலைகள் தொடர்பில் நாட்டில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருடைய இந்தக் கருத்து மற்றும் பெற்றோலியக் கூட்டுத் தாபனம் மற்றும் பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை நடத்த கோப் குழு தீர்மானித்திருந்தது.

நாட்டு நிலைமை சுமுகமடைந்ததும் இந்தக் கோப் குழுக் கூட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார்.

Spread the love