கொழும்பு முதல்வர் குழு யாழ். மாநகர சபைக்கு விஜயம்!

கொழும்பு மேயர் திருமதி ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கொழும்பு மேயரும் அத்துடன் சபையைப் பிரதிநிதித்துப்படுத்தும் 75 பேர் கொண்ட குழுவினர் யாழ். மாநகரசபை மண்டபத்தில் நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது யாழ். மாநகர சபை முதல்வர் திருவாளர் வி.மணிவண்ணன் சபைக்கு வருகை தர முடியாத சந்தர்ப்பத்தில் பிரதி மேயர் திருவாளர் துரைராஜா ஈசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொழும்பு பிரதி மேயர் திருவாளர் எம்.டி.எம். இக்பால் மற்றும் யாழ். பிரதி மேயர் திருவாளர் துரைராஜா ஈசன் ஆகியோர் தமக்குள் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

Spread the love