கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு – 14 பேர் உயிரிழந்துள்ளனர்

கொலம்பியாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் Dosquebradas பகுதியில் நேற்று (08) இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது

நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் மண்மேட்டில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியிலுள்ள Otun ஆறு உடைப்பெடுத்துள்ளமையினால் கரையோர பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு Mocoa பகுதியில் இதேபோன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 320 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love