கால்நடை வளர்ப்பு, பால்வளத்தை அபிவிருத்திச் செய்ய இலங்கை, இந்தியா இடையே ஒப்பந்தம்

கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் ஒத்துழைப்பதற்காக இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பால் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துதல், பால் உற்பத்தி மற்றும் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்காக ஒன்றிணைந்து செயற்பட இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் வருமானத்தை இச்செயற்த்திட்டமானது அதிகரிக்கும்.

இதற்காக வரைவு செய்யப்பட்ட கூட்டு பிரகடனத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, மேற்படி கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Spread the love