கரன்னகொட வடமேல் ஆளுநராக ஜனாதிபதி கோட்டாவால் நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்தார்.

வடமேல் ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே தற்போது கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love