கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்து மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் 16.65 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மத்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 15.5 டொலர்களாக காணப்பட்டது. நுகர்வோர் விலைச்சுட்டி அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நுகர்வோர் விலை சுட்டி ஆறு தசம் எட்டு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் துறை, கூரியர் சேவை, மாகாணங்களுக்கு இடையிலான விமான சேவை, ரயில் சேவை வீதி மற்றும் கடல் போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மத்திய அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு அல்லது குறைந்தபட்ச சம்பள நிர்ணயமானது மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love