கனடாவின் தென் ஒன்றாரியோவில் கடுமையான பனிப்புயல் வீசும் சாத்தியம்; கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் எச்சரிக்கை

கனடாவின் தென் ஒன்றாரியோவில் கடுமையான பனிப்புயல் வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பனிப்புயல் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவிலும் வியாழக்கிழமை காலையிலும் பனிப்புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் ஒன்றாரியோவின் அநேக பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் சில பகுதிகளில் பனிப்புயலின் தாக்கத்தை உணர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக சில சந்தர்ப்பங்களில் போக்குவரத்தில் ஈடுபடுவது சிரமமாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்கு எப்பொழுது பனிப்புயல் வீசும் என்பது பற்றிய துல்லியத் தகவல்கள் இல்லாத காரணத்தினால் எந்தளவு பனிப்பொழிவு ஏற்படும் என்பது பற்றிய சரியான எதிர்வுகூறல்கள் வெளியிடப்படவில்லை

Spread the love