கசகசா விதைகளில் உள்ள நன்மைகள்

கசகசா ‘Poppy Seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது. கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.  கசகசா விதைகளின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

 இதில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.  இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை அளவாக பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகளை தரும். அந்தவகையில் கசகசாவை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கசகசாவில் கரையாத நார்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

  • நமது உடல் அதிகப்படியான வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. அந்த சமயத்தில் உடலுக்கு தேவையான கார்போஹைட்டு மற்றும் கால்சியத்தை கொடுக்க வல்லது.

  • உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் பொடியாக்கிய சர்க்கரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறு உருண்டையாக பிடித்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து விடுபடலாம்.

  • எலும்புகளின் வலிமைக்கு தேவையான அளவு கால்சியத்தை இவை அதிக அளவில் கொண்டிருப்பதால் 40 வயதுக்கு மேல் ஏற்படும் மூட்டுவலியை வராமல் தடுக்கிறது.

  • இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கசகசா அடங்கிய உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.   

  • மாதுளம் பழச் சாற்றில் கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் சக்தி அதிகரிக்கும்.

  • கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணி கீரையில் போட்டுக் கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.
Spread the love