இலங்கை அமைச்சு நிர்வாகங்களுக்குள் மாற்றம்

இலங்கையின் முக்கிய 10 அமைச்சுக்களின் உட்கட்டமைப்பில் மாற்றங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள், மற்றும் செயற்படுத்துதல் தொடர்பிலும், அமைச்சுகளுக்குட்பட்ட திணைக்களங்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (10.01) வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானி மூலமாக இந்த அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.


சில இராஜாங்க அமைச்சுக்களின் பொறுப்புகள், நேரடியாக அமைச்சுக்களின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் முகாமைத்துவ மாற்றங்களாகவே அமைந்துள்ளன. அமைச்சர்களோ, அமைச்சர்களின் பதவிகளிலோ எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை.

Spread the love