ஒருநாள் போட்டி தொடர் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2 ஆவது ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடந்த 3 ஆவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்து இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றன.

முதல் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2 ஆவது போட்டி 14 ஆம் திகதியும், 3 ஆவது போட்டி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  20 ஓவர் போட்டி தொடரை கைப் பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும். இந்திய அணியில் ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, முகமது சமி, ஜடேஜா, சாகல், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பேர்ஸ்டோவ், மொயின் அலி, பென்ஸ் டோக்ஸ், ஜேசன்ராய், டேவிட் வில்லி ஆகிய வீரர்கள் உள்ளனர். இரு அணி வீரர்கள் வருமாறு:

இந்தியா: ரோகித்சர்மா (அணித் தலைவர்), ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா , அக்சர் படேல், சாகல், முகமது சமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ் ணா, அர்ஷ்தீப்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (அணித்தலைவர்), ஜேசன் ராய், ஜோரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், பிலிப் சபால்ட், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, ஹாரி புருக், சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, பார்கின்சன், டாப்லே.

Spread the love