ஐ.பி.எல்.லில் இருந்து வில்லியம்சன் விலகல்

ஐ.பி.எல். தொடரில் இருந்துமுழங்கால் காயம் காரணமாக வில்லியம்சன் விலகினார். நியூஸிலாந்து அணி கப்டன் கேன் வில்லியம்சன் (வயது 32). பிரீமியர் லீக் கிரிக்கெட் 16 ஆவது சீசனில் நடப்பு சம்பியன் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை வீரர் ருதுராஜ் அடித்த பந்தை, எல்லை அருகே அந்தரத்தில் பறந்து தடுத்தார். அப்போது வலது முழங்காலில் காயம் ஏற்பட, போட்டியில் இருந்து வெளியேறினார். காயத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இத்தொடரில் இருந்து விலகினார்.விரைவில் நியூஸிலாந்து திரும்ப உள்ளார்.

இதுகுறித்து குஜராத் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடரின் தொடக்கத்திலேயே வில்லியம்சன் வெளியேறியது வருத்தம். இவர் காயத்திலிருந்து பூரண குணமடைந்து, விரைவில் போட்டிக்குத் திரும்ப வாழ்த்துகிறோம் என தெரிவித்திருந்தது.

Spread the love