ஐ.நா ஆணையாளரை  சந்தித்த கொழும்பு பேராயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. எமக்கு நீதி வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டை சந்தித்துப் பேசினார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசின் நீதி விசாரணை மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ள பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் எமக்கு நீதி வேண்டும் என ஐ.நா உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்காக வத்திக்கான் அனுமதியை நாடிய அவர், வத்திக்கான் சென்று பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்துப் பேசிய பின்னர் ஜெனிவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love