ஐநா.வின் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு!

ஐ.நா-வின் தரகுடன் நடைபெறும் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் காரணமாக கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தடைபட்டது.

துருக்கியின் உதவியுடன் ஐ.நா. நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் கருங்கடல் பகுதியில் வர்த்தகம் நடை பெற ரஷ்யா- உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், கிரிமியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பிரிட்டன் உதவி செய்ததாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Spread the love