உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்தது சுவிட்சர்லாந்து!

சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம், உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது. ஆல்ப்ஸ் மலை நோக்கி இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில், மிக நீளமான ரயிலாக இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பல அழகான மலை நகரங்கள், 48 பாலங்கள் மற்றும் 22 சுரங்கங்கள் வழியாக ஆல்பைன் இயற்கைக்காட்சிகளுடன் ரயில் கடந்து செல்லும். 1.9 கிலோமீற்றர் நீளத்துடன் 100 பெட்டி களுடன், 4 எஞ்ஜின்களால் இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில், 25 கிலோமீற்றர் தொலைவு கொண்ட மலை பயணத்தை நிறைவு செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Spread the love