ஐநாவில் நடந்த முக்கிய வாக்கெடுப்பை முழுமையாகப் புறக்கணித்தது இந்தியா

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைனை, ரஷ்யா ஆக்கிரமிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா பாதுகாப்புப் பேரவை கூடியது. இதனை ரஷ்யா ஆட்சேபித்ததுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது குறித்து, வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தெரிவித்தது.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆலோசனைக் கூட்டத்திற்கு எதிராக, ரஷ்யாவும், சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், அயர்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உட்பட 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதேநேரம் இந்தியா, கென்யா, மேற்கு ஆபிரிக்க நாடான கபான் ஆகிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன வாக்களிப்பை புறக்கணித்த நாடுகளுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love