எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கூடுதல் ஆர்வம் – ஹூண்டாய் மோட்டார் குழுமம் அறிவிப்பு

ஹூண்டாய் மோட்டார் குழுமம் இந்த ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் நிறுவன பிராண்டுகளின் கீழ் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இ.வி.6 மற்றும் ஜெனிசிஸ் ஜி.வி.60 போன்ற மாடல்கள் அடங்கும்.

இதுதவிர 2025 வாக்கில் பத்து லட்சம், 2026 வாக்கில் 17 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. என்ஜின் வளர்ச்சி மையத்தை முழுமையாக புறக்கணிக்காமல், அதனை எலெக்ட்ரிக் பிரிவுக்கு மாற்ற ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. என்ஜின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த குழுக்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் என்ஜின் வளர்ச்சி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தும். இந்த ஆண்டு மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 43.2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Spread the love