ஊடகங்கள் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் – கர்தினால்

இலங்கையிலுள்ள ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பசெயற்படாமல், சமூகத்திலுள்ள பிரச்சினைகள் குறித்த உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்கூறியுள்ளார்.

விர்பம் (Verbum TV) கத்தோலிக்க தொலைக்காட்சியின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ஆராதனையில் “அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கி உண்மையை மறைத்தால் ஊடகங்கள் நிலைக்காது” என கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் கூறினார்.

சில ஊடகங்களின் உண்மையை மூடி மறைக்கும் செயற்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. ஆளும் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளினால் கட்டுப்படுத்தப்படும் ஊடக நிறுவனங்களே இவ்வாறு செயற்படுகின்றன. சில அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்களை வரவேற்கும் பார்வையாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஊடக நிறுவனங்கள் உள்ளன. அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள், அரசியல் கட்சிகளும் அப்படித்தான். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஊடக நிறுவனங்களும் நீண்ட காலம் நீடிக்காது,” என்றார்

சில அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்களாலும் அக் கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டவர்களால் மட்டுமே இவ் ஊடகங்களின் செயற்பாடுகள் வரவேற்கப்படும்.

அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள், அதுபோன்றே அரசியல் கட்சிகளின் நிலையும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்களும் நீண்ட காலம் நிலைக்க முடியாது” என்று கூறிய அவர், உண்மை வெளிவரும்போது உண்மையை மறைத்த ஊடகங்கள் அழிந்துபோகும். உண்மை என்றைக்கோ ஒருநாள் வெளிவரும் என்று கூறினார்.

Spread the love